வரி விகிதத்தை உயர்த்துகிறதா மத்திய அரசு? காங்கிரஸ் கட்சி கடும் குற்றச்சாட்டு!

0
124

கடந்த 2017ஆம் வருடம் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது அதிலிருந்து பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன.

இதனால் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை திரும்பப்பெற வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்திருந்தார்கள். அதற்கேற்றார்போல மத்திய அரசுக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.ஆனாலும் மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நின்றது.

கடந்த 2016 ஆம் ஆண்டு வரையில் பொது மக்களிடம் வரி வசூல் என்பது பலவிதத்தில் இருந்து வந்தது. ஆனால் இந்த ஜிஎஸ்டி முறை நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து சரக்கு மற்றும் சேவை வரி என்று 2 முறை வரிகள் மட்டுமே விதிக்கப்படுகின்றன.

இந்தநிலையில், ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றியமைத்து வருவாயை அதிகரிப்பது தொடர்பாக பரிந்துரை செய்வதற்காக மாநில அமைச்சர்கள் அடங்கிய குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த வருடம் நியமனம் செய்தது.

இதற்கு நடுவே 143 பொருட்களில் ஜிஎஸ்டி வரி விகிதத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுதொடர்பாக மாநில அரசுகளின் கருத்தை ஜிஎஸ்டி கவுன்சில் கேட்டிருப்பதாகவும்.

இந்த வரி உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, 143 பொருட்களின் ஜிஎஸ்டி வரி விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாக மாநிலங்களுடன் ஜிஎஸ்டி கவுன்சில் கருத்து கேட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த திட்டம் ஏற்கனவே நசுக்கப்பட்ட சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர அமைப்பினரை வெகுவாக பாதித்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு இந்த தகவலை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் நேற்று மறுத்து அறிக்கை விட்டனர். மாநிலங்களிடம் ஜிஎஸ்டி கவுன்சில் எந்தவித கருத்தும் கேட்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு பெரும்பாலான பொருட்களை அதிகபட்ச ஜிஎஸ்டி வரி விகிதமான 20 சதவீதத்திற்கு உயர்த்தும் திட்டமெதுவும் அரசிடமில்லை என்றும் ஜிஎஸ்டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரி விகிதத்தில் மாற்றம் செய்யும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleஇந்தக் கல்வித் தகுதி இருந்தால் போதும் மாதம் 50,000 சம்பளம்! செம ஆஃபர் மிஸ் பண்ணிடாதிங்க!
Next articleதொடர்ந்து 2வது முறையாக அதிபராக தேர்வானார் இமானுவேல் மேக்ரான்! உலகத் தலைவர்கள் வாழ்த்து!