இனி அட்டை பெட்டிகளுக்கெல்லாம் ஜிஎஸ்டி விதிப்பு!! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!
இந்தியாவில் விதிக்கப்படும் வரி விதிப்பு முறையினை பொதுவாக GST(Goods and Service Tax) என்று அழைப்பார்கள். இது ஒரு மறை முக வரி விதிப்பு முறையை சேர்ந்தது. இதற்கு முன்பு VAT(Value Added Tax) எனப்படும் பல முனை வரி நடைமுறையில் இருந்தது.இந்த வரி மாநிலத்திருக்கு மாநிலம் வேறுபட்டது,மேலும் மக்களாகிய நுகர்வோர் அதிக வரி செலுத்த வேண்டி இருந்தது.இதனால் மாநில வருவாயும் பாதித்தது.
இதற்காக இந்தியா முழுதும் ஒரே வரிவிதிப்பு முறையாககொண்டு வரப்பட்டது தான் GST எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி.தற்போது டெல்லியில் நடைபெற்ற இதன் 53 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு தலைமை வகித்தார்.மேலும் இக்கூட்டத்தொடரில் அனைத்து மாநில GST கவுன்சில் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.அதில் பல புதிய GST வரி தொடர்பான அறிவிக்கைகள் வெளியாகின.
அவை எஃகு, அலுமினியம், இரும்பு போன்றவற்றால் செய்யப்பட்ட பால் கேன்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.மேலும் அட்டை பெட்டிகள் குறிப்பாக பேப்பர் அல்லது கார்டூன் பாக்ஸ் என அழைக்கப்படும் கார்ட் போர்டுகளில் செய்யப்படும் அட்டை பெட்டிகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் இத்தொழிலை நம்பி இருக்கும் இம்மாச்சல் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள், மேலும் அவர்களின் வாழ்வதாரம் மேம்படும்.
இந்திய ரயில்வே துறையால் வழங்கப்படும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் பேட்டரி வாகனங்கள்,மற்றும் ரயில்வே துறையால் பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி.யிலிருந்து வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமில்லாமல் மாணவர்கள் மற்றும் வேலை நிமர்த்தமாக தனியார் விடுதிகளில் தங்கும் மக்கள் ஆகியோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இது மாதம் ஒரு நபருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் விடுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.மேலும் அவர்கள் குறைந்தபட்சமாக மூன்று மாத காலம் விடுதிகளில் தங்கி இருக்க வேண்டும்.சிறு, குறு வரி செலுத்துவோர் பயனடையும் வகையில், ஜிஎஸ்டி வரி திருப்பிச் செலுத்துதல்க்கான 4ஆம் படிவத்தை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 30 லிருந்து, ஜூன் 30 வரை நீட்டிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திடம் 2024-25 காலண்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.