முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் முன்னேற்றம்! கில்லின் சதத்தால் GT வெற்றி!!

0
193
#image_title
முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் முன்னேற்றம்! கில்லின் சதத்தால் GT வெற்றி!
ஐபிஎல் தொடரில் நேற்று அதாவது மே 15ம் தேதி நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
நேற்று அதாவது மே 15ம் தேதி அஹமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.
குஜராத் அணியில் அதிரடியாக விளையாடிய சுப்மான் கில் சதம் அடித்து 101 ரன்கள் சேர்த்தார். பந்துவீச்சில் ஹைதராபாத் அணியில் சிறப்பாக பந்துவீசி புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். ஹென்ரிச் க்ளாசன் நிலைத்து ஆடி 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். குஜராத் அணியில் பந்துவீச்சில் அதிரடியாக பந்துவீசி முகம்மது ஷமி 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து தோல்வி பெற்றது.
34 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. கில் அடித்த அதிரடி சதம் காரணமாகவும் முகம்மது ஷமி அவர்களின் அதிரடியான பந்துவீச்சு காரணமாகவும் நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.
இதையடுத்து ஐபிஎல் தொடரில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாவது அணியாக வெளியேறியுள்ளது.சென்ற வருடம் நடந்த ஐபிஎல் தொடரிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
Previous articleமொபைல் போன்கள் திருட்டு போய்விட்டது என்று இனிமேல் வருத்தம் வேண்டாம்! இதோ அறிமுகமாக இருக்கும் புதிய வசதி! 
Next articleயூடியூப் வீடியோவை லைக் செய்ததால் அதிர்ச்சி! பறிபோன 42 லட்ச ரூபாய்!!