தமிழக முதல்வரின் கோரிக்கையை நிராகரித்தது குஜராத் அரசு! தமிழர்கள் அதிர்ச்சி

அகமதாபாத் தமிழ் பள்ளியை திறக்க முடியாது என்று திட்டவட்டம் – தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது குஜராத் அரசு நிராகரித்ததால் தமிழர்கள் அதிர்ச்சி…

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மணிநகரில் செயல்பட்டு வந்த தமிழ் மேனிலைப் பள்ளியை அம்மாநில அரசு மூடியது. இதற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசும் கண்டனம் தெரிவித்து, பள்ளியை திறக்க தமிழக அரசும், பிரதமர் மோடியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, தமிழ் பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், தமிழ் பள்ளிகளுக்கு ஆகும் செலவை தமிழக அரசே ஏற்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

தமிழக முதல்வரின் கோரிக்கையை நிராகரித்தது குஜராத் அரசு! தமிழர்கள் அதிர்ச்சி

இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து குஜராத் அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள குஜராத் வாழ் தமிழர்கள், பள்ளியை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Comment