சிவபெருமானை நோக்கி தவம் புரிந்த குரு பகவான்!

0
141

குரு பகவான் ஆங்கிரஸ முனிவருக்கும், சித்ராதேவிக்கும், பிறந்தவர் இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு, ஒரு சகோதரன், ஒரு சகோதரியும், பெற்ற குருவிற்கு மகன் ஒருவர் உண்டு, அவர் பெயர் பரத்வாஜர்.

குரு பகவான் நவக்கிரகங்களில் 5வது இடத்தை பெறுகிறார், இவர் மிகவும் சுபத்தன்மை பெற்றவர், இவர் பார்க்கும் இடமெல்லாம் விருத்தியாகும் என ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது.

கிரகங்களிலேயே மிகவும் தூரத்தில் பெரிய கிரகமாக வீற்றிருக்கிறார் குரு பகவான், ஒரு ராசியை கடக்க ஒரு வருடத்தை எடுத்துக் கொள்ளும் இவர், 12 ராசிகளையும் கடக்க 12 வருடங்கள் ஆகின்றன.

குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும், சஞ்சாரம் செய்யும் போது சந்திரன் மகம் நட்சத்திரத்தில் வந்து குருவை தொட்டுவிட்டால் அன்றுதான் மகாமகம் என்கிறார்கள்.

இந்த குரு பகவானை பற்றி புராணத்தில் பல கதைகள் இருக்கின்றன.

காசிக்குச் சென்று குருபகவான் சிவரங்கத்தை பிரதிஷ்டை செய்து 16,000 வருடங்கள் சிவபெருமான் குறித்து தவம் செய்தார். இவருடைய தவத்தை நிச்சய சிவபெருமான் கிரக மண்டலத்தில் இவருக்கு இடம் கொடுத்ததாக வரலாறு சொல்கிறது.

குருவிற்கு பிரகஸ்பதி எனவும், வியாழன் எனவும், பெயருண்டு, மேலும் இவர் மந்திரி எனவும், அரசன் எனவும், அழைக்கப்படுகிறார். குரு பகவான் தமிழகத்தில் தென்குடி, திட்டைப்பட்டி, திருச்செந்தூர், உள்ளிட்ட 3 தலங்களுக்கு சென்று ஈஸ்வரனை பூஜித்து பேறு பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத் தொந்தரவு ஏற்படலாம்!
Next articleவிமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசையா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!