குரு பகவான் ஆதிக்கமிக்க நபர்களிடம் இந்த குணத்தையெல்லாம் காணலாம்

0
80

9 கிரகங்களில் குரு பகவான் ஆண் கிரகமாக கருதப்படுகிறார். 5, 7, 9 உள்ளிட்ட இடங்களை பார்க்கும் உரிமையை இவர் பெறுகிறார்.

செல்வம் குழந்தை பேரு உள்ளிட்டவருக்கு இவர் அதிபதி மூத்த சகோதரர்கள், சகோதரிகளை பற்றிய விவரங்களை இவர் தெரிவிப்பார்.

இவர் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களிடம் நற்குணங்கள், இரக்கம், ஞானம், தலைமை தாங்கும் தகுதி, புகழ், சாஸ்திர அறிவு, பக்தி, சிறப்பான செயல்களை செய்யும் ஆற்றல் உள்ளிட்டவை காணப்படும்.

குரு பகவான் கணவன் மனைவிக்கிடையே நல்ல உறவை உண்டாக்குவார் குளிர்ச்சியான சுப நோய்களை வழங்குவார். அடக்கம், நேர்மை, நாணயம், உள்ளிட்டவற்றை கொடுப்பார்.

இவருடைய ஆதிக்கத்தை பெற்றோர்கள் கற்றோரையும், பெரியோரையும் மதித்து பணிவாக நடந்து கொள்வார்கள். இவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பான்மையை அனைவரும் காணலாம். அடுத்தவர்களுக்கு தங்களால் முடிந்த அளவு உதவி செய்வார்கள் உழைப்பதற்கு சற்றும் தயங்க மாட்டார்கள்.

இவர்கள் எந்த காரியத்தையும் அவசரப்பட்டு செய்ய மாட்டார்கள் நன்றாக யோசித்து முடிவு செய்த பிறகு தான் காரியத்தில் இறங்குவார்கள். சட்டத்திற்கு புறம்பாகவோ, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க எப்போதும் விரும்ப மாட்டார்கள்.

இவர்களுக்கு அதிர்ஷ்டம் வழங்கும் நிறம் மஞ்சள், அதிர்ஷ்டம் கொடுக்கும் கல் புஷ்பராகம், மலர் முல்லை, உலோகம் பொன், தானியம் கடலை, மரம் அரசு, திசை வடகிழக்கு, சுவை இனிப்பு, ஒரு ராசியை கடந்து செல்லும் காலம் ஒரு வருடம்.

குருவுக்கு சூரியன், சந்திரன் செவ்வாய் உள்ளிட்டவை நட்பு கிரகங்களாகவும் புதனும் சுக்கிரனும் பகல் கிரகங்களாகவும் சனி, ராகு, கேது ஆகியவை இரண்டும் சமமாக கலந்த கிரகங்களாகவும் விளங்குகின்றனர்.

குரு தனுசு ராசியிலும், மீன ராசியிலும், ஆட்சியையும், கடக ராசியில் உச்சமும், மகர ராசியில் நீச்சமும் அடைகிறார். இவருக்கு மேஷம், சிம்மம்,கன்னி, விருச்சிகம் உள்ளிட்ட வீடுகள் நட்பு விடுதலாகவும் ரிஷபம், மிதுனம், துலாம், உள்ளிட்ட வீடுகள் பகை வீடுகளாகவும் விளங்குகின்றனர்