குரு தோஷ பரிகாரம்!

Photo of author

By Sakthi

நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு ஜோதிட நூல்களில் முக்கிய இடம் வழங்கப்பட்டிருக்கிறது. ஜாதகத்தினடிப்படையில் குரு பார்வை பட்டால் தான் திருமணம் மற்றும் குழந்தை செல்வம், சிறப்பான பதவி, செல்வச் சிறப்பு, உள்ளிட்டவை உண்டாகும்.

சுய ஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் இல்லாமல் வலு குறைந்திருந்தால் அல்லது கொடூரமாக இருந்தாலும், கோச்சார ரீதியாக கெட்டவரானாலோ குரு தோஷம் என சொல்லப்படுகிறது. இந்த தோஷம் நீங்குவதற்கான பரிகாரம் செய்ய வேண்டும், அந்த பரிகாரம் என்னவென்றால் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து பூஜை செய்ய வேண்டும். தட்சணாமூர்த்தியை வழிபட வேண்டும் என ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

தட்சணாமூர்த்தியை தரிசனம் செய்து பூஜை செய்து தியானம் செய்து அர்ச்சனை உள்ளிட்டவற்றை செய்தால் குரு தோஷம் நீங்கும் என சூரியனார் ஆலய வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தோஷம் நீங்க பூஜை செய்ய மிகச் சிறப்பான இடம் ஆலங்குடி, குரு தோஷத்திற்கு ஆலங்குடி பரிகார தளம் என அதன் தலபுராணம் குறிப்பிடுகிறது.

குரு பகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்து மஞ்சள் நிற ஆடை புஷ்பராகமணி வெண்முல்லை உள்ளிட்டவற்றால் அலங்கரிக்கப்பட்ட குரு பகவானை வணங்க வேண்டும், அரசமர சமித்துக்களால் ஹோமம் செய்து கடலை பொடி அன்னதால் அல்லது எலுமிச்சை ரச அன்னத்தால் ஆகுதி செய்து வேள்வியை முடிக்க வேண்டும் என்கிறார்கள்.

கொண்டைக்கடலையில் அவருக்கு மாலை அணிவிக்க வேண்டும், குரு கீர்த்தனைகளை அடானா ராகத்தில் பாடி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் இவற்றால் குரு தோஷம் நீங்கும் என்கிறார்கள்.