ரஜினியின் அரசியல் தொடர்பான முடிவை கேட்டு கதறிய லாரன்ஸ்!

0
125

நடிகர் ரஜினிகாந்தை தன்னுடைய குருவாக ஏற்று நடந்து வருபவர் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ். ரஜினி அரசியலுக்கு வரவேண்டுமென்று விரும்பியவர்கள் முக்கியமான ஒருவர்.ரஜினி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த உடன் லாரன்ஸ் உடைய மனநிலை எப்படி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஜனவரி மாதம் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்த ரஜினிகாந்த், அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கே படப்பிடிப்பு தளத்தில் அவருடன் இருந்த நான்கு நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, ரஜினிகாந்த் அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. முடிவில் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

மருத்துவ மனையிலிருந்து சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவில்லை என்று தெரிவித்துவிட்டார். இந்தநிலையில், ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் குருவே நீங்கள் எடுத்த முடிவானது, 100% சரி மற்ற எல்லாவற்றையும் விடவும், உங்களுடைய உடல்நிலை தான் முக்கியம் உங்களை நம்பியவர்கள் மீது அக்கறை வைத்து சுயநலம் இல்லாத ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள். என்று தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருக்கின்றார்.

Previous articleமுதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்ந்து அதிமுகவை சீண்டும் பாஜக! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!
Next articleநான் ஆன்மீகத்திற்கு எதிரானவன் இல்லை! கமல்ஹாசன் திடீர் பல்டி!