விவாகரத்து பெற போகும் பிரபல ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி?

Photo of author

By Priya

தமிழ் சினிமாவில் இசை ஜோடிகளாக உள்ளவர்கள் தான் இசையமைபாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி. சைந்தவி பல திரைப்படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். பள்ளியில் ஒன்றாக படித்த ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தேவி இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் (GV Prakash) ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானலும், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயில் பாடலை பாடியுள்ளார். இந்நிலையில் தான் ஷங்கர் தயாரிப்பில் வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அறிமுகமான முதல் படமே தேசிய விருது வாங்கி கொடுத்தது.

இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ், திடீரென்று நடிகர் அவதாரம் எடுத்தார். அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வெற்றியை கொடுத்தது. இதனால் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான இளம் நடிகராக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் தான் ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி (Chaindavi) இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், இருவரும் விவாகரத்து பெற போவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் படிக்க: Sakshi Agarwal: என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள்..!