Boys Movie: ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பிரபல இசையமைப்பாளர்..!

0
404
boys movie
#image_title

Boys Movie: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பாய்ஸ். பிரமாண்ட இயக்குனர் என்றாலே அது ஷங்கர் தான். பாய்ஸ் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக முதலில் நடிக்க இருந்த பிரபல இசைப்பாளர் பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது.

பாய்ஸ் திரைப்படத்தில் மொத்தமாக 5 நடிகர்கள் நடித்திருப்பார்கள். இதில் ஹுரோவாக நடிகர் சித்தார் நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் பரத், மணிகண்டன், தமன், நகுள் ஆகியோர் உடன் நடித்திருப்பார்கள். அவர்களுடன் விவேக், ஜெனிலியா நடித்திருப்பார்கள். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார். இந்த படத்தை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் முடிவு செய்யும் போதே இதில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் புதுமுக நடிகர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தாராம்.

எனவே இந்த படத்திற்கான நடிகர்கள் தேர்வு செய்யும் வேலையில் இயக்குனர் ஷங்கர் இறங்கியுள்ளார். அந்த வேளையில் தான் அவரின் நினைவுக்கு வந்தவர் ஜி.வி பிரகாஷ். இவர் இதற்கு முன் இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜென்டில் மேன் திரைப்படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலை பாடியிருப்பார். அதனால் பாய்ஸ் படத்தில் இவரை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்றும், இதனால் படத்திற்கு புரோமோஷன் கிடைக்கும் என்று நினைத்தார்.

ஆனால் அந்த சமயத்தில் ஜி.வி. பிரகாஷ் (Music Director GV Prakash) பள்ளிக்கூடம் படித்திருந்து கொண்டிருந்ததால், அவரால் பாய்ஸ் படத்தில் நடிக்க முடியாமல் சென்றுவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன் பிறகு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியன திரைப்படம் வெயில். இந்த திரைப்படத்தில் இயக்குனர் ஷங்கர் ஜி.வி. பிரகாஷை இசையமைபாளாராக அறிமுகப்படுத்தினார். வெயில் படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட்டான நிலையில் தேசிய விருதும் கொடுக்கப்பட்டது.

மேலும் படிக்க: அக்காவாக நடிக்க தனது சம்பளத்தை உயர்த்தி கேட்ட நடிகை நயன்தாரா..! எத்தனை கோடி தெரியுமா?

Previous articleவிஜய் அண்ணன் இல்லை..! சித்தப்பா..! கில்லி படத்தில் நடித்த ஜெனிபர்..!
Next article7 வருடங்களாக பாடாத பாடகி ஜானகி அம்மா..! இதுதான் காரணமா? வாயடைத்து போன ரசிகர்கள்.. !