ஆந்திராவை கிறித்தவ மாநிலமாக்கும் முயற்சியின் முதல் படியே! ஜெகன் மோகனை விமர்சிக்கும் ஹச்.ராஜா

Photo of author

By Ammasi Manickam

புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக பணம், நகை மட்டும் அல்லாது நிலங்களையும் செலுத்துவது வழக்கமாக உள்ளது. இதுவரை பக்தர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு நிலங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் தமிழக பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கிய தமிழ்நாட்டில் இருக்கும் 23 சொத்துக்கள் உட்பட மொத்தமாக 50 சொத்துக்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்தது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கிய சொத்துகளை பொது ஏலத்தில் விற்பனை செய்யும் முடிவுக்கு அரசியல் கட்சியினர், பக்தர்கள் உள்ளிட்டோர் தங்களுடைய கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் இது குறித்து விமர்சித்த பாஜகவின் தேசிய செயலாளர் ஹச்.ராஜா ஆந்திராவை கிறித்தவ மாநிலமாக்கும் முயற்சியின் முதல் படியே என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவருடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது.

திருமலா திருப்தி தேவஸ்தானம் திருப்தி கோவில் சொத்துக்களை விற்க நினைப்பது சட்ட விரோதமானது. கண்டிக்கத்தக்கது. ஒரு சர்ச் அல்லது மசூதி சொத்துக்களை விற்க ஜெகன் மோகன் முயற்சிப்பாரா? ஆந்திராவை கிறித்தவ மாநிலமாக்கும் முயற்சியின் முதல் படியே இது என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் கோவில்கள் அரசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.