“பெரியார் சிலையை உடைப்பேன்” – எச்.ராஜா பதிவு!!  6 மாதம்  சிறை தண்டனை கொடுத்த நீதிமன்றம்!!

பெரியார் சிலையை உடைப்பேன் என்ற கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில் எச்.ராஜா  6 மாதம்  சிறை விதித்து சென்னை நீதி  நீதிமன்றம்.

கடந்த 2018 ஆம் ஆண்டு எம்.பி கனிமொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பெரியார் சிலையை உடைப்பேன் என்று தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருந்தார்  பாஜக தலைமை நிர்வாகி  எச் ராஜா. இவரின் மீது இந்த விமர்சனம் தொடர்பாக பல்வேறு அவதூறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய எச் ராஜா தரப்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் அமர்வில் விசாரணை செய்த போது எச். ராஜா மீதான அவதூறு வழக்கை மூன்று மாதத்தில் விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் இந்த வழக்கை எம்.பி. எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை உட்படுத்த உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி .ஜெயவேல் தலைமையில் விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் இன்று நீதிபதி ஜி.ஜெயவேல்
வழக்கின் தீர்ப்பு  வழங்கினார். இதில் எம்.பி கனிமொழி அவதூறாக விமர்சித்து , தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என்ற கருத்தை தெரிவித்து இருந்தார்.

அதனை எச். ராஜா தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் 2018 ஆம் ஆண்டு பதிவு செய்து இருப்பது நிருபிக்கப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு ஆறு மாதம் சிறை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். இது பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது அவருக்கு வழங்கப்பட்ட சிறை தீர்ப்பை நிறுத்தி வைத்து இருக்கிறது உயர்நீதிமன்றம். இதில் பாஜக தலையீடு இருக்கிறாதா என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.