தற்போது ஆர் எஸ் பாரதி கைது! அடுத்து தயாநிதிமாறன் கைதா? ஹச் ராஜா தகவல்

Photo of author

By Ammasi Manickam

இன்று காலை திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை காவல் துறையினர் திடீரென கைது செய்துள்ளனர். இன்று அதிகாலையிலேயே சென்னை ஆலந்தூரில் வசித்து வரும் ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் சென்று காவல் துறையினர் கைது செய்தனர்.

கடந்த  பிப்ரவரி 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற திமுக கட்சி கூட்டத்தில்  ஆர்.எஸ் பாரதி தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து  அவதூறாக பேசியது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அந்த கூட்டத்தில் இவர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவருக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன.

இவ்வாறு இவர் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறாக பேசிய சர்ச்சைக்குரிய கருத்தை கண்டித்து ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் சுந்தரம் என்பவர் ஆர்.எஸ் பாரதி மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.  இந்த புகாரின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவு  உதவி ஆணையர் தலைமையிலான காவல் துறையினர், ஆர்.எஸ் பாரதியை இன்று அதிகாலை கைது செய்தனர்.  இதனையடுத்து ஆர்,எஸ். பாரதி தற்போது இடைக்கால ஜாமீனில் வெளி வந்துள்ளார். இந்த பிரச்சனை அடங்கும் முன்பே தற்போது ஆர்.எஸ்.பாரதி கைது அடுத்து தயாநிதிமாறன் தான் என்று பாஜக தேசிய செயலாளர் சூசகமாக தெரிவித்துள்ளார்.இது குறித்து அவருடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது.

திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி கைது. வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதிமாறன் in Waiting list? என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தலைமை செயலாளரை சந்திக்க சென்ற தயாநிதிமாறன் தாழ்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். இதை கருத்தில் கொண்டு தான் ஹச் ராஜா அடுத்து தயாநிதிமாறன் கைதாக வாய்ப்புள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.