ஸ்டாலினை விளாசிய எச் ராஜா! திமுகவினர் கடும் கொந்தளிப்பு!

Photo of author

By Sakthi

இந்துக்களை அவமானப்படுத்திய திமுக தலைவர் ஸ்டாலின் வந்தவர்களை மக்கள் முன்பு அம்பல படுத்துவதற்காகவே இந்த வேல் யாத்திரை என்று பாஜகவைச்சார்ந்த எச் ராஜா தெரிவித்திருக்கின்றார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பாஜக சார்பாக வேல் யாத்திரை நடத்த இருப்பதாக தமிழக பாஜகவால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த யாத்திரை முருகனுடைய ஆறுபடை வீடுகள் இருக்கும் நகரங்கள் வழியாக செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் யாத்திரைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

பாஜகவினரின் இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது அவர்கள் யாத்திரை என்ற பெயரில் மதக்கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சி நடப்பதால், அதனை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்த யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பாஜகவினரின் இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்க இயலாது. என்று நேற்று அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதன்காரணமாக, திருத்தணியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மலையின் மேலே யாத்திரை ஆரம்பிக்கவுள்ள நிலையில் பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

திருத்தணி முருகன் கோயில், உள்பட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சென்னையிலுள்ள தன்னுடைய வீட்டில் இருந்து புறப்பட்ட பஜவை சார்ந்த எச் ராஜா இந்துக்களை அவமானப்படுத்திய திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை மக்கள் முன்பு அம்பல படுத்துவதற்காகவே வேல் நடத்த இருக்கின்றோம்.

அதேபோல இதற்கு போலீசார் அனுமதி வழங்கினால் பாஜக யாத்திரை நடத்தும் இல்லை என்றால் போராட்டம் நடத்தும் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.