தமிழக மக்கள் இனிமேலும் ஏமாற்றமுடியாது !திமுகவை சாடிய எச் ராஜா!

0
133

தமிழ் நாட்டின் மக்களை திசை திருப்பும் விதமாக திமுகவின் தலைவர் பேசி வருகின்றார். அவருடைய தந்திரங்கள் இனிமேல் தமிழகத்தில் உபயோகப்படாது பாஜகவின் ஆட்சியில் சென்ற வருடங்களில் எல்லாவற்றிற்கும் ஒரு திட்டமாவது சென்றடைந்து இருக்கிறது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா தெரிவித்திருக்கிறார்.

மதுரையில் பத்திரிகையாளர்களிடம் உரையாடிய தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் ஹெச்.ராஜா அமெரிக்கா உள்ளிட்ட மிகப்பெரிய வல்லரசு நாடுகள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்தையும் வைத்துக்கொண்டிருக்கும் வைரஸ் இருக்கின்ற இந்த நெருக்கடியான காலகட்டத்தில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார். இது பாராட்டுக்குரியது இதைவிட ஒரு சிறப்பான பட்ஜெட்டை யாராலும் தாக்கல் செய்ய இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.

சென்ற ஆறு மாதங்களாகவே நாடு முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கில் தொழில் நிறுவனங்கள் செயல்படாமல் இருந்த காரணத்தால் , தொழிலாளர்கள் வேலை இல்லாமல் இருந்ததாலும் நாட்டின் வளர்ச்சி முக்கியம் என மிகவும் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.

சென்ற 2009ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில், நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 1.62 லட்சம் கிலோமீட்டர்கள் மட்டுமே சாலை போடப்பட்டனர் ஆனாலும் எங்களுடைய ஆட்சி காலத்தில் சென்ற ஐந்து மாதங்களில் மட்டுமே 2 லட்சம் கிலோமீட்டர் வரையில் சாலைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த அளவிற்கு சாலைகள் போடும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. பாஜக ஆட்சியில் தான் சாலை போன்ற அடிப்படை கட்டமைப்புகளுக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

எங்களுடைய ஆட்சியில் சென்ற ஆறு வருடங்களில் எல்லா வீட்டிற்கும் ஏதாவது ஒரு திட்டமாவது சென்று கொண்டு இருக்கிறது எனவும் எச் ராஜா தெரிவித்திருக்கிறார். அதோடு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களை திசை திருப்பும் விதமாக திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் பேசி வருகின்றனர் அதையும் கூட மக்கள் நம்பி ஏமாந்து இருக்கிறார்கள் இனிமேல் திமுகவின் வித்தைகள் எதுவும் தமிழக மக்களிடம் செயல்படாது என்று தெரிவித்தார்.

Previous articleஉயரும் பாமகவின் செல்வாக்கு! சகித்து கொள்ள முடியாமல் ஸ்டாலின் செய்த சித்து விளையாட்டு
Next articleசட்டசபையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்! மகிழ்ச்சியின் தமிழக மக்கள்!