பாதியாக அனுமதித்து பயணிகளுக்கு அனுமதி! வல்லுநர் குழு பரிந்துரை!

Photo of author

By Hasini

பாதியாக அனுமதித்து பயணிகளுக்கு அனுமதி! வல்லுநர் குழு பரிந்துரை!

தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சில தினங்களாக குறைந்துள்ள காரணத்தினால் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் சில தளர்வுகளை அரசு அறிவித்த நிலையில், வரும் திங்கட்கிழமையுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கு குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில், தொற்று பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் பயணிகளை பாதியாக குறைத்து பேருந்து பயணங்களை அனுமதிக்கலாம் எனவும், மேலும் சில தளர்வுகளையும் தரலாம் எனவும், ஆனால் தொற்று குறையாத 8 மாவட்டங்களில் எந்த தளர்வுகளையும் தர வேண்டாம் என்றும், கூறியுள்ளனர்.

மேலும் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில்கடைகளின் திறக்கும் நேரத்தை அதிகரிக்கலாம், மால்கள், பெரிய வணிக நிறுவனங்கள், ஜவுளி கடைகள் போன்றவற்றை திறக்கலாம் எனவும் யோசித்து வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் உள்ளது.

இந்த கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் பல மருத்துவத்துறை அதிகாரிகள்,பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், முதுநிலை மண்டலக் குழு தலைவர் டாக்டர் கே.என்.அருண்குமார், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இயக்குனர் டாக்டர் ஜெ.வி.பீட்டர்,இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானியும், தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குனருமான டாக்டர் பிரதீப் கவுர்.

இந்திய மருத்துவ சங்கத்தலைவர் டாக்டர் பி.ராமகிருஷ்ணன், பொது சுகாதார ஆலோசகர் டாக்டர் பி.குகன்நாதன், அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தொற்று நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் வி.ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை முடிந்த நிலையில், தமிழக முதல்வர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை முடிந்த பிறகு எந்தெந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று அரசு வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.