மீண்டும் ஃபார்முக்கு வந்த குட்டி குஷ்பு!

Photo of author

By Sakthi

இந்திய சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத சகாப்தமாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. இவர் ஹிந்தி மொழி திரைப்படத்தில் முதன் முதலாக கால்பதித்தார். மெல்ல, மெல்ல தன்னுடைய நடிப்புத் திறமை காரணமாக, தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி ஹன்சிகா பல நடிகர்களுடன் தமிழ் திரையுலகில் நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

இந்த சூழ்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரு மொழிகளிலும் உருவாக இருக்கும் ஒரு இணையதள தொடரில் இதுவரையில் இல்லாத உச்சகட்ட கவர்ச்சி காட்டி இவர் நடித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் கொழுகொழுவென இருந்த நடிகை அதோடு சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் என்பது பலரும் அறிந்ததுதான்.