நுழைவுத் தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசு உத்தரவு!!

Photo of author

By Preethi

நுழைவுத் தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசு உத்தரவு!!

Preethi

Updated on:

Happy news for students who are going to write the entrance exam !! Tamil Nadu government order !!

நுழைவுத் தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!
தமிழக அரசு உத்தரவு!!

தமிழ்நாட்டில் கோரோனோ நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதில் கடைகள் வணிக வளாகங்கள் மற்றும் கோயில்கள் போன்ற பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது சில தளர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இதில் கடைகள் திறப்பது மற்றும் பல்வேறு நோய் தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ளஅனைத்து நூலகங்களும் கோரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு அனைத்து நூலகங்களையும் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இது நுழைவுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்காகவும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அரசு தரப்பில் குறிப்பிட பட்டுள்ளது. பல மாணவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பதால் அவர்களால் தாமாக கல்வி நிறுவனங்களில் சேர்ந்து புத்தகங்களை வாங்கி படிக்க இயலாது என்பதால் நூலகங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் நூலகங்களில் நோய்தொற்று பரவலை தடுக்க கடைபிடிக்கப்படும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து நூலகங்களிலும் இன்று முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நூலகங்களிலும் தனிநபர் இடைவெளி, முகக் கவசம் அணிதல், சனிடைசர் உபயோகப்படுத்துதல் போன்ற நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நூலகங்களை திறந்ததால் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ஏழை மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்காகவும் போட்டி தேர்விற்காகவும் தங்களை தயார்படுத்திக்கொள்ள இது மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஏழை மாணவர்களின் கல்வி விஷயத்தில் அரசு காட்டும் ஆர்வம் அனைவர் மத்தியிலும் மிகவும் வரவேற்பு பெற்றது.