ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்து அதைத்தொடர்ந்து ரஷ்யாவிற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஐநா சபை உட்பட அமெரிக்காவில் அனைத்து நாடுகளும் ரஷ்யாவிற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.
அதேசமயம் அமெரிக்கா ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது இதனால் உலகத்தின் பல்வேறு நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பை வைத்துக் கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் அந்த நாட்டுடன் வர்த்தக தொடர்பை துண்டித்திருக்கின்றன.
அதோடு அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையினடிப்படையில் ரஷ்யாவில் கச்சா எண்ணெயின் விலை 100 அமெரிக்க டாலர்கள் வரையில் அதிகரித்தது.
நிலைமை இப்படியிருக்க இந்தியாவிலோ நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்வி மற்றும் துணை கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் பதிலளித்தார்கள். இதில் முக்கியமாக ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் மத்திய அரசு கச்சா எண்ணெய் வாங்குகிறதா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார்.
அவருடைய இந்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பதிலளிக்கும்போது2 வருடங்களாக நீட்டிக்கும் நோய்தொற்று கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் ரஷ்யா உக்ரைன் உள்ளிட்ட நாடுகளிடையே போர் போன்ற நெருக்கடியான இந்த சூழ்நிலையில், கச்சா எண்ணெய்க்கான அனைத்து வாய்ப்புகளும் ஆராயப்படும் என்று தெரிவித்தார்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காகத்தான் அந்த நாட்டுடன் பேசி வருவதாக தெரிவித்த அவர் இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்து இறக்குமதிக்கான சூழ்நிலை உறுதியானவுடன் அதனை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
நாட்டில் கடந்த 5 வருடங்களில் நடைபெற்ற பாதுகாப்பு படை விமானப்படை விபத்துக்களின் சம்பவங்கள் தொடர்பான கேள்விக்கு பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பதிலளித்தார்.
அவர் தெரிவிக்கும் போது கடந்த 5ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என்று 45 விமான விபத்துகள் நடந்திருக்கின்றன. இதில் அதிகபட்சமாக விமானப்படை மட்டுமே 29 விபத்துக்களை சந்தித்திருக்கிறது என்று தெரிவித்தார்.
இந்த விபத்துக்களில் ஒட்டுமொத்தமாக 42 வீரர்கள் பலியாகி இருப்பதாக தெரிவித்த அவர் இதிலும் 34 பேரை பறிகொடுத்து விமானப்படை முதலிடத்தில் இருப்பதாகவும் கூறினார். இந்தியாவில் விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் விமானிகள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது பல்வேறு விமான நிறுவனங்களில் சுமார் 9000 விமானிகள் பணிபுரிந்து வருவதாகவும், இதில் 87 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், தெரிவித்தார். இந்தியாவில் விமான பற்றாக்குறை எதுவும் தற்போது இல்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு நடுவே தற்போதைய நிதியாண்டில் 1.07 லட்சம் கோடி கூடுதல் செலவினம் விவரங்களை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது துணை மானிய கோரிக்கையின் 3வது தொகுதியின் படி 1.58 லட்சம் கோடிக்கு மேல் மொத்த கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. இதில் உர மானியம் 14, 902 கோடி உட்பட பல்வேறு செலவினங்கள் பட்டியலிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது