உங்கள் வீட்டில் துளசி செடி தானாக முளைத்திருக்கிறதா!!அப்போ அதற்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Janani

உங்கள் வீட்டில் துளசி செடி தானாக முளைத்திருக்கிறதா!!அப்போ அதற்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

Janani

Has Tulsi plant sprouted spontaneously in your house!! Then know what it means!!

மிகவும் புனிதத் தன்மை வாய்ந்த துளசி செடியை வளர்க்காதவர்கள் இங்கு யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் கடைகளில் இருந்து வாங்கி வந்தோ அல்லது மற்றவர் வீடுகளில் இருந்து வாங்கி வந்தோ தங்களது வீடுகளில் வளர்த்து வருவர். துளசி செடியை நமது வீடுகளில் வளர்ப்பதனால் வீட்டில் தெய்வீக கடாட்சமும், ஒரு மன அமைதியும் கிடைக்கும். மேலும் நேர்மறையான ஆற்றல்களையும் அந்த குடும்பத்திற்கு பரவச் செய்யும். நமது வீடுகளில் சரியான திசையில் துளசி மாடத்தினை வைத்து வழிபாடு செய்து வருவதன் மூலம் நோயற்ற வாழ்வு, தொழில் முன்னேற்றம், பணவரவு, மன அமைதி போன்ற அனைத்திலுமே நன்மையை பெற முடியும்.
வாஸ்து பிரச்சனையினால் நமது வீடுகளில் சிலவற்றை இடித்து மாற்ற வேண்டும். அது செய்ய வேண்டும், இது செய்ய வேண்டும் என்று பலரும் கூறுவர். ஆனால் துளசி செடியை சரியான திசையில் வைத்து ஒரு விளக்கினை ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் அனைத்து வித வாஸ்து தோஷங்களும் நீங்கிவிடும். அந்த சரியான திசை எதுவென்றால் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் துளசிச் செடியை வைத்து வளர்க்கலாம்.
எந்த ஒரு தெய்வத்திற்கும் துளசி இல்லாமல் வழிபாட்டினை செய்து முடிக்க மாட்டார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த துளசி செடியினை நமது வீட்டில் மாடம் வைத்து வளர்த்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறலாம். நம்மலாகவே துளசி செடியை வாங்கி வந்தோ அல்லது விதைகள் மூலமோ வளர்க்காமல், ஒரு சில வீடுகளில் தானாகவே துளசி செடிகள் முளைத்து வளர்ந்து கொண்டிருக்கும். நிறைய செடிகள் வளர்ந்து கொண்டே இருப்பதால் பிடுங்கி எறிந்தாலும் கூட மீண்டும் மீண்டும் துளசி செடிகள் முளைத்துக் கொண்டே இருக்கும்.
இவ்வாறு தானாக துளசி செடிகள் முளைத்து வளர்ந்து வருவதனால் அந்த குடும்பத்தில் மகாலட்சுமியின் அருள் நிறைந்து இருப்பதாக அர்த்தமாகும். எதிர்மறையான ஆற்றல்கள், எதிர்மறை சக்திகள், குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போவது, வறுமை ஆகிய அனைத்துமே நீங்க போவதற்கான அறிகுறியாக இது விளங்கும். பொருளாதார ரீதியாகவும், பணம் ரீதியாகவும் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பு கிடைக்கும்.
அந்த குடும்பத்தில் சந்தோசங்கள் மற்றும் நிம்மதிகள் நிலைத்து இருப்பதாகவும், மங்கள நிகழ்ச்சிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வரப்போவதாகவும் அர்த்தம் தரும். எனவே உங்கள் வீட்டில் தானாக துளசி செடி முளைத்து இருந்தால் அதனை சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நம்மால் தினமும் முடியாவிட்டாலும் கூட செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துளசி செடிக்கு முன்பாக சிறியதாக ஒரு கோலத்தினை போட்டு விளக்கினை ஏற்றி வைத்து பாருங்கள் நடக்கவிருக்கும் அதிசயத்தை நீங்களே கண்கூடாக காண்பீர்கள்.
தானாகவே நமது வீட்டிற்கு துளசியின் வழியாக மகாலட்சுமி வந்திருப்பதால் துளசி செடியினை சுத்தமாகவும், பக்தியுடனும் அதனை வழிபட வேண்டும். இந்த துளசிச் செடியினை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கினை போட்டு மனதார நமது வேண்டுதலை கூறும் பொழுது நமது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுவதாக சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் நாம் வாங்கி வந்த துளசி செடியோ அல்லது தானாக முளைத்த துளசி செடியோ திடீரென வளராமல் போய்விட்டாலோ அல்லது வாடி போனாலோ நமது வீட்டிற்கு ஏதேனும் ஒரு துன்பம் வரப்போவதாக அர்த்தம்.
அவ்வாறு செடி வாடி போக ஆரம்பிக்கிறது என்றால் அதனை கண்டு வருத்தப்படாமல் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் அந்த செடியினை அகற்றிவிட்டு புதியதாக ஒரு செடியினை வாங்கி வைத்துக் கொள்ளலாம். துளசி செடி இருக்கக்கூடிய இடத்தினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். துடைப்பம், செருப்பு போன்றவற்றை செடியின் அருகில் வைக்க கூடாது.