இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து உழைத்தால் மட்டுமே அந்த குடும்பத்தை ஓரளவிற்காவது காப்பாற்ற முடியும் என்கின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இருந்தாலும் கூட குடும்பத் தேவைகளை நிறைவாக பூர்த்தி செய்யவும், திடீர் அவசர தேவைக்காகவும் தங்களுக்கு என வைத்திருக்கக் கூடிய தங்க ஆபரணங்களை அடகு கடையில் வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விடுகிறது.
அவ்வாறு வைக்கக்கூடிய தங்க ஆபரணங்களை என்னதான் முயன்றாலும் அதனை மீட்க முடியாமலே போய்விடுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு எளிய பரிகாரத்தை செய்யும் பொழுது சிறிது சிறிதாக நமது ஆபரணங்களை மீட்டுக் கொள்வதற்கான வாய்ப்பு நமக்கு அமையும்.
தங்க நகைகளை அடகு வைக்கும் பொழுது நமது பெயரிலோ அல்லது நமது கையாலோ அடகு வைக்கக் கூடாது. நகை அடகு வைத்து அதிக வருடங்கள் ஆகிறது, அதற்கு வட்டி மட்டும்தான் கட்டிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் நகையை மீட்க முடியவில்லை என்கின்றவர்கள், ஒவ்வொரு மாதமும் வருகின்ற ரேவதி நட்சத்திரத்தின் பொழுது அல்லது குளிகை நேரத்தில் ஒரு சிறிய தங்கத்தை யாவது மீட்டு நமது வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
குளிகை நேரம் என்பது ஒவ்வொரு தினமும் நமக்கு வரும் நமது வீட்டின் காலண்டரில் அந்த குளிகை நேரம் எப்பொழுது வருகிறது என்பதை பார்த்து அந்த நேரத்தில் அடகு கடைக்குச் சென்று ஒரு சிறிய அளவு நகையாவது மீட்க வேண்டும்.
ஒரு சிறிய நகையை கூட மீட்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள், சுந்தரர் பாடிய தேவாரப் பதிகத்தை நாம் முழு மனதுடனும், நம்பிக்கையுடனும், பக்தி உடனும் படிக்கும் பொழுது நிச்சயம் நமது நகையை மீட்பதற்கான வாய்ப்பை நமக்கு கடவுள் ஏற்படுத்திக் கொடுப்பார்.
இந்த வழிபாட்டில் உள்ள சூட்சுமம் என்னவென்றால் நாம் செய்யக்கூடிய பரிகாரத்தின் மீது முழு நம்பிக்கை மற்றும் பக்தி வேண்டும் என்பதே. இது நடக்குமா? இது உண்மையா? என்ற சந்தேகம் கொண்டு செய்தால் அதற்கான பலன் நமக்கு கிடைக்காது.
சுந்தரர் பாடிய தேவாரப் பதிகத்தில் உள்ள ஏழாம் திருமுறை பாடல்களை நாம் தினமும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் படிக்கும் பொழுது, கண்டிப்பாக நமது நகையை மீட்பதற்கான சூழ்நிலையையும், வாய்ப்பையும் கடவுள் அமைத்துக் கொடுப்பார். மேலும் தங்க ஆபரணங்களை சேமிக்க விரும்புவர்களும் இந்த தேவாரப் பதிகத்தை படிப்பதன் மூலம் ஆபரணங்களை சேமிக்கவும் முடியும்.