கடந்த 2020 ஆம் ஆண்டை யாராலும் மறக்க முடியாது.இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஆண்டின் இறுதிக்குள் கொத்து கொத்தாக உயிர் பலி வாங்கியது.
கொரோனாவின் வீரியம் அதிகரிக்கத் தொடங்கி மக்களை வீட்டிலேயே முடக்கி போட்டது.கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகமாகவே அதன் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் இந்தியாவில் கோவிஷீல்டு,கோவக்சின் போன்ற தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டது.இந்த தடுப்பூசிகளில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி பற்றி சமீபத்தில் திடுக்கிடும் தகவல் வெளிவந்திருக்கிறது.
இந்த கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்களுக்கு சில பக்க விளைவுகள் ஏற்படுவது ஆய்வுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் முதியவர்களை விட இளம் வயதினரே அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசி தான் அனைவரையும் காக்கும் காவலனாக இருந்தது.
ஆனால் தற்பொழுது தடுப்பூசியே அனைவருக்கும் எமனாக மாறிவருகிறது.இளம் பருவ பெண்கள்,அலர்ஜி உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்போருக்கு இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.
கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்ட பலருக்கு மூச்சுத்திணறல்,சுவாசக் குழாய் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது.இது தவிர சரும பிரச்சனை,நரம்பு மண்டல கோளாறு,மாதவிடாய் சம்மந்தபட்ட பிரச்சனைகளைக்,பக்கவாதம்,நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.அரிதாகவே உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
ஆனால் மருத்துவ நிபுணர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் நல்லது என்று கூறுகின்றனர்.இதனால் காலத்திற்கும் கொரோனா பற்றிய அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறுகின்றனர்.