EPFO கணக்கில் UAN எண் மறந்துவிட்டீர்களா!!இந்த முறையில் PF பேலன்ஸ் சரி பார்த்துக் கொள்ளலாம்!!

Photo of author

By Jeevitha

EPFO:உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருப்பதை சரிபார்க்க UAN தேவையில்லை. இந்த UAN எண் இல்லாமல் எளிதாக கண்டறியலாம்.

EPFO என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சேமிக்கப்படும் அமைப்பு. இது ஒரு ஓய்வூதிய திட்டமாகும். மேலும் இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு முக்கியமான சமூக பாதுகாப்புத் திட்டமாகும். இந்த பணம் அவசர கால கட்டத்தில் மிகவும் உதவியாக இருக்கும். இந்த PF பணம் நாம் எங்கு வேலை செய்தாலும் ஒரு பங்கு பிடிக்கப்படும்.

அதில் எவ்வளவு பணம் பிடிக்கப்பட்டுள்ளது என்பதை சில காரணங்களால் சரிபார்க்கப்பட வேண்டியிருக்கும். அப்போது UAN எண் நினைவில் இல்லாமல் போகலாம். அதற்கு PF  கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். பிறகு விவரங்கள் அனைத்தும் ஒரு குறுஞ்செய்தி மூலம் தெரியும். மேலும் உங்கள் மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும். அந்த செய்தியில் “EPFOHO UAN” என உள்ளீடு செய்ய வேண்டும்.

பிறகு UAN என்னிருக்கு உங்களுக்கு விருப்பமான மொழிக்கான மொழி குறியீட்டினை டைப் செய்துகொள்ள வேண்டும். அதாவது நீங்கள் ஆங்கிலத்தில் தகவல்களை பெற விரும்பினால் “EPFOHO UAN ENG” என தட்டச்சு செய்ய வேண்டும். செய்தி அனுப்பிய பிறகு PF இருப்பை கொண்ட SMS ஒன்று உங்களுக்கு வரும். அதில் உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருப்பில் உள்ளது என தெரிந்து கொள்ள முடியும். இது அனைத்திற்கும் PF கணக்கில் உங்கள் MOBILE PHONE எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.