அவரு கமலுக்குத்தான் நல்ல நல்ல பாடல்களை கொடுத்தாரு! இசைஞானி முன்னிலையில் அவரை பற்றி சூப்பர்ஸ்டார் பேச்சு!

Photo of author

By Sakthi

அவரு கமலுக்குத்தான் நல்ல நல்ல பாடல்களை கொடுத்தாரு! இசைஞானி முன்னிலையில் அவரை பற்றி சூப்பர்ஸ்டார் பேச்சு!
சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்கள் அனைவராலும் அழைக்கக் கூடிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இசைஞானி இளையராஜா குறித்து காணெலி வாயிலாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அமெரிக்கா நாட்டில் தமிழ்நாடு அறக்கட்டளை செயல்பட்டு வருகின்றது. தற்பொழுது தமிழ்நாடு அறக்கட்டளையின் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் காணொளி வாயிலாக கலந்து கொண்டு பேசினார்.
அப்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ” இசைஞானி இளையராஜா அவர்கள் என்னை விட கமல்ஹாசன் அவர்களுக்குத் தான் அதிகமான ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். எனக்கும் கொடுத்துள்ளார். ஆனால் அவ்வளவாக ஹிட் பாடல்களை அவர் எனக்கு தந்தது இல்லை.
ஆரம்பத்தில் எனக்கும் இசைஞானி அவர்கள் ஹிட் பாடல்களை கொடுத்துக் கொண்டுதான் இருந்தார். 1970களில் பொதுவாக என். மனசு தங்கம், ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும் ஆகிய ஹிட் பாடல்களை கொடுத்த இசைஞானி அவர்கள் அதன் பின்னர் அவர் அப்படியே கமல் அவர்களின் பக்கம் சாய்ந்து விட்டார்.
கமல் நடித்த தேவர் மகன், நாயகன் ஆகிய படங்களுக்கு எல்லாம் சூப்பரான ஹிட் பாடல்களை தந்துள்ளார். அதற்கு நடிகர் கமலும் ஒரு காரணம் ஆவார். ஆம் நடிகர் கமல் அடுத்தடுத்து வித்தியாசமான படைப்புகளை செய்திருந்தார்” என்று சிரித்துக் கொண்டே பேசினார். அந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா அவர்கள் இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.