Pradhan Mantri Awas Yojana:ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சந்திரசேகர் “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” திட்டத்தில் உள்ள புதிய நிபந்தனை அறிவித்து இருக்கிறார்.
“பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” என்ற திட்டம் என்பது ஒரு கோடி நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது ஆகும். இதன் மூலம் நகர்ப்புறங்களில் மலிவு விலையில் வீடுகள் வாங்க அல்லது வாடகைக்கு வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டம் ஐந்து ஆண்டுகளில் (2024-25 முதல் 2028-29 வரை) செயல்படுத்தப்படும் என அறிவித்து இருந்து மத்திய அரசு.
இந்த நிலையில் உத்திரபிரதேச சட்டமன்ற கூட்டத்தொடரில் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சந்திரசேகர் “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” திட்டத்தின் புதிய நிபந்தனைகளை அறிவித்து இருக்கிறார். அதில் மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் வைத்து இருப்பவர்கள் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது.
மேலும், விவசாய செய்ய டிராக்டர் போன்ற கருவிகள் வைத்து இருப்பவர்கள் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது என அறிவித்து இருந்தார். மேலும் 50 ஆயிரம் மேல் கடன் பெற தகுதி வாய்ந்தவர்கள் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது என அறிவித்தார். மேலும் வேளாண் சாரா தொழில் நிறுவனங்கள் நடத்துவோர் ரூ. 15 ஆயிரத்துக்கு மேல் ஊதியம் பெறுபவர்கள் வீட்டு வசதி திட்டத்தில் பயன்பெற இயலாது.
வருமான வரி, தொழில் வரி செலுத்துபவர்கள் பி.எம்.ஏ.ஒய். திட்டத்தின் பயன் பெறுபவர்கள் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது என அறிவித்தார். மேலும் 2.5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்து இருப்பவர்கள் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது என அறிவித்தார்.