கோபிசெட்டிபாளையத்தின் வேட்பாளர் இவர் தானாம்.. வெளியான டாப் சீக்ரெட்!!

0
422
He is the candidate of Kopichettipalayam.. Top secret released!!
He is the candidate of Kopichettipalayam.. Top secret released!!

ADMK: அதிமுகவின் மூத்த தலைவராகவும், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்து அவர்களின் நம்பிக்கையாகவும் அறியப்பட்டு வந்தவர் செங்கோட்டையன். இவர் அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டுமென கூறி அதிமுக தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனை பொருட்படுத்தாத ஏபிஎஸ் அவரை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். இவருக்கு பின் புதிய ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக ஏ.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் தன்னுடைய இளமை காலம் முதல் அதிமுகவின் விசுவாசியாக இருந்து வருகிறார். 2001 ஆம் ஆண்டு முதல் முறையாக  மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் வீட்டு புறநகர் மற்றும் வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினரானார். அதன் பிறகு 2021 ஆம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்யிட்டு வெற்றி பெற்ற இவர், அதே மாவட்டத்தில் அதிமுகவின் பொறுப்பாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்ட செங்கோட்டையனின் இடத்தில் யார் அமர்த்தப்படுவார்கள் என்ற சந்தேகம் எழுந்தது. செங்கோட்டையன் பதவி நீக்கத்திற்கு பிறகு அந்த இடத்தில் பதவி வகித்த ஏ.கே.செல்வராஜ் அவருடைய பணியை சிறப்பாக செய்து அப்பகுதி மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்திருப்பதாக கூறப்படுவதால் கோபிசெட்டிபாளையத்தின் வேட்பாளராக ஏ.கே. செல்வராஜ் நிறுத்தப்படுவார் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

Previous articleநால்வர் கூட்டணியின் பின்புலத்தில் இருக்கும் தலைவர் இவரா.. இபிஎஸ்யை மறைமுகமாக விமர்சித்த பாஜக தலைவர்!!
Next articleஇபிஎஸ்க்கு எதிராக திரும்பிய நயினார்.. பேட்டியால் ஏற்பட போகும் பிரிவினை!! பிரிவின் தொடக்கத்தில் அதிமுக கூட்டணி!!