ஆசிரம அதிகாரி கொலை வழக்கில் இவர்தான் குற்றவாளி! தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

Photo of author

By Hasini

ஆசிரம அதிகாரி கொலை வழக்கில் இவர்தான் குற்றவாளி! தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

Hasini

ஆசிரம அதிகாரி கொலை வழக்கில் இவர்தான் குற்றவாளி! தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

ஹரியானா மாநிலத்தில்  சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் ஒன்று உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் என்பவர் ஆவார். இவர் இரண்டு துறவி பெண்களை பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனிடையே கடந்த 2002ஆம் ஆண்டு சத்திரபதி என்ற பத்திரிகையாளர் தனது பத்திரிகையில் அந்த அமைப்பின் தலைவர் குறித்தும், பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகவும், புலனாய்வு செய்து செய்தி ஒன்றை வெளியிட்டார்.

அதன் காரணமாக அவர் 2002ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கிடையே அதேபோல் கடந்த 2002ஆம் ஆண்டு அந்த ஆசிரமத்தின் மேலாளரான ரஞ்சித் சிங் என்பவரும் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆசிரமத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பூரா சச் என்ற பெயரில் எழுதப்பட்ட ஒரு கடிதம் பத்திரிகைகளில் வெளியாகி மிகவும் பிரபலமானது.

இதன் பின்னணியில் ரஞ்சித்சிங் இருந்ததன் காரணமாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இது தொடர்பான வழக்கில் அந்த ஆசிரமத்தின் தலைவர், கிருஷ்ணலால், ஜஸ்பீர் சிங், சப்தில் சிங், இந்திரசேனா உட்பட பலர் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் ரஞ்சித் சிங்கை கொன்ற வழக்கில் அந்த ஆசிரமத்தின் தலைவரும் மற்ற 4 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அவர்களுக்கான தண்டனை விவரங்கள் இந்த மாதம் 12 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.