சியான் 63 திரைப்படத்தின் இயக்குநர் இவரா! 

0
85
#image_title
சியான் 63 திரைப்படத்தின் இயக்குநர் இவரா!
நடிகர் சியான் விக்ரம் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் 63வது திரைப்படமான சியான் 63 திரைப்படத்தின் இயக்குநர் பற்றி முக்கியமான தகவல் கிடைத்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சியான் விக்ரம் அவர்கள் தற்பொழுது பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இயக்குநர் கௌதமி வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் சியான் விக்ரம் அடுத்ததாக நடிக்கும் அவருடைய 62வது திரைப்படமான சியான்62 படத்தை பற்றி சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகி வெளியான சித்தா திரைப்படத்தை இயக்கிய எஸ்.யூ அருண்குமார் அவர்கள் சியான் 62 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் நடிகர் சியான் விக்ரம் அடுத்து நடிக்கவுள்ள 63வது திரைப்படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
அதாவது நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து ஓடிடியில் வெளியான அன்பறிவு  திரைப்படத்தை இயக்கியவர் அஷ்வின் ராம். இவர் அன்பறிவு திரைப்படத்தை இயக்கினார் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
இந்நிலையில் இயக்குநர் அஷ்வின் ராம் அவர்கள் தான் நடிகர் சியான் விக்ரம் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அதாவது சியான் விக்ரம் அவர்கள் நடிக்கவுள்ள 63வது திரைப்படத்தை இயக்குநர் அஷ்வின் ராம் அவர்களை இயக்குநராக  தேர்ந்தெடுத்துள்ளாராம்.
மேலும் இயக்குநர் அஷ்வின் ராம் அவர்கள் சியான்63 திரைப்படத்திற்கான முதல் கட்ட பணியில் இறங்கியுள்ளதாகவும் சியான் 63 திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.