இந்திய அணியில் திலக் வர்மாவிற்கு பதிலாக இவர் இருக்க வேண்டும்!! முன்னாள் வீரர் பேட்டி!!

0
111
He should replace Tilak Verma in the Indian team!! Ex player interview!!

இந்திய அணியில் திலக் வர்மாவிற்கு பதிலாக இவர் இருக்க வேண்டும்!! முன்னாள் வீரர் பேட்டி!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வருகிற ஒரு மாத காலத்திற்கு மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று பத்து போட்டிகளில் களமிறங்க உள்ளனர். இதற்கான டெஸ்ட் தொடர் ஜூலை 12 முதல் 16 மற்றும் ஜூலை 20 முதல் 24 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

மேலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது வருகிற ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 போட்டியானது ஆகஸ்ட் 3, 6, 8, 12, 15 முதலிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் விவரம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் டி20 போட்டிக்கான இந்திய அணிப்பற்றி எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது. எனவ தற்போது இந்த டி20 தொடருக்கான இந்திய அணி வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணைக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றுள்ளனர். மேலும் மும்பை அணியை சேர்ந்த இளம் வீரரான திலக் வர்மா மற்றும் டெல்லி அணியைச் சேர்ந்த பந்து வீச்சாளர் முகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அணியில் மூத்த வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. மேலும் ரிங்கு சிங் இந்த அணிக்கு தேர்வாகவில்லை. இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று ரிங்கு சிங் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய மன வேதனையை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் ரிங்கு சிங் மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட்-ற்கு அயர்லாந்து டி20 போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று பிசிசிஐ –லிருந்து தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து பத்திரிக்கையில் பேட்டி கொடுத்துள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, இந்திய அணியில் திலக் வர்மாவிற்கு பதிலாக ரிங்கு சிங்கை சேர்க்க வேண்டும் என்றும், இந்திய அணியில் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா ஆகியோர் விளையாடுவார்கள். எனவே இவர்களைத் தொடர்ந்து தான் திலக் வர்மா விளையாட முடியும்.

அதனால் திலக் வர்மாவை பின் வரிசையில் வைத்துவிட்டு ரிங்கு சிங்கை சேர்த்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று கூறி உள்ளார். ஏனென்றால் ரிங்கு சிங் பின் வரிசையில் களமிறங்கி பேட்டிங்கில் கலக்கியது நம் அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.