நோய் தொற்று பரபரப்பு பிறகு மக்களிடையே ஹெல்த் இன்சூரன்ஸ் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வயதானவர்கள் நோய் தாக்கத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகரித்திருப்பதால் சிகிச்சை மருந்துகள் செவிலியர் கட்டணம் உள்ளிட்ட மருத்துவ செலவினங்கள் அதிகரித்து இருக்கிறது. பொருளாதார நெருக்கடி, பண வீக்கம், வட்டி உயர்வு, விலையில்லா திட்டம் என்று தற்போதைய சூழ்நிலை நிலையற்றதாக இருப்பதால் எதிர்பாராத சமயத்தில் ஏற்படக்கூடிய மருத்துவ செலவுகளை சமாளிக்க ஹெல்த் இன்சூரன்ஸ் முக்கியமானதாக கருதப்படுகிறது.
அதிலும் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் முழு மெடிக்கல் செலவையும் இன்சூரன்ஸ் மூலமாக கவர் செய்ய இளம் வயதிலேயே மருத்துவ காப்பீடு எடுக்க வேண்டும். ஒரு வேலை வயதானவர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டி இருந்தால் அவர்களுடைய வயது மற்றும் நோய்களை பொறுத்து இன்சூரன்ஸ் பிரிமியம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உண்டு.
அத்துடன் வயதானவர்களுக்கு எதிர்பாராத சமயத்தில் புதிய நோய்களால் அல்லது ஏற்கனவே இருக்கின்ற நோயின் பக்க விளைவுகளால் பாதிப்பு உண்டாகலாம் என்பதால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிஸியில் முதியவர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க திட்டமிட்டு இருக்கிறீர்கள் என்றால் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பதை தற்போது அறிந்து கொள்ளலாம்.
வயதானவர்களுக்கு நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூத்த குடிமக்களின் பெயரில் எடுக்கப்படும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரையிலான கவரேஜை மட்டுமே வழங்குகின்றன.
இன்னொரு புறம் அதிக பிரிமியம் செலுத்துவதற்கான திறன் மற்றும் குறைவான வயதுள்ள முதியோர்களுக்கு அதிகபட்சமாக 1 கோடி ரூபாய் வரையில் வாழ்நாள் ஹெல்த் இன்சூரன்ஸ் காப்பீடு கிடைக்கிறது. வாடிக்கையாளர்களை தவிர ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு இடையில் நடைபெறும் போட்டியை பயன்படுத்தி அதிக கவரேஜ் தரக்கூடிய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்யலாம்.
மூத்த குடி மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் விலை உயர்ந்த மருத்துவ செலவுகளாக இருக்கலாம் என்பதால் பெரும்பாலான ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கோ பேமென்ட் எனப்படும் இணை கட்டண முறையை பின்பற்றுகின்றன.
இதன் மூலமாக மருத்துவ செலவில் ஒரு குறிப்பிட்ட தொகையை பாலிசிதாரர்கள் செலுத்த வேண்டி இருக்கும் இதனால் முதியவர்கள் நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்படலாம்.
இதில் சில ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய வாரிசுதாரர்களுக்கான இணை கட்டண சதவீதத்தை அவர்களே தேர்வு செய்து கொள்ள அனுமதி வழங்குகிறது. இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது மிகவும் நல்லது.
இன்சூரன்ஸ் நிறுவனங்களிடையே கேப்பின் எனப்படும் அந்த நிறுவனங்கள் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு விழித்துள்ள வரம்புகளை குறிக்கிறது. அதாவது வயதானவர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை கருத்து வரையில் அறை வாடகை, மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு கவரேஜ் கிடையாது என்று வரம்புகள் விதிக்கப்படும்.
சில நேரங்களில் முதியவர்களின் வயதை பொறுத்து கூடுதல் வரம்புகளை கூட ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விதிக்கலாம் இதனால் வயதான நபர்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் அதற்கான பலன்களை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போகலாம். ஆகவே வயதானவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கு ஏற்ற கட்டுப்பாடுகள் இல்லாத ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்க வேண்டும்.