நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. வெளியாகப்போகும் ஊரடங்கு அறிவிப்பு!!

Photo of author

By Madhu

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. வெளியாகப்போகும் ஊரடங்கு அறிவிப்பு!!

Madhu

health-ministry-instructions-to-prevent-the-spread-of-corona

நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது. அதில் விமானம், ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைந்தனர். கொரோனா பரவுவதை தடுப்பதற்கு தடுப்பூசி போடப்பட்டு கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பிறகு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பப்பட்டது.

தற்போது மீண்டும் கொரோனா பரவல் தொடங்கியுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றது. கொரோனா வேகமெடுத்து வரும் நிலையில் ஹரியானா, டெல்லி, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், தெலுங்கானா, புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கோவா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரிக்க காணப்படுகின்றது. தமிழ்நாட்டில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. .

இந்தியாவில் மே 19ஆம் தேதி 257 ஆக இருந்த கொரோனா தொற்று மே 26 அன்று 1,011 பேருக்கு கொரோனா தொற்று நான்கு மடங்காக அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது பரவி வரக்கூடிய தொற்று LF.7,NB.1.8 என கூறப்படுகின்றது . புதிய வகை கொரோனா வைரஸ் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொது சுகாதாரத்துறை சார்பாக பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூட கூடிய கண்காட்சி, திருவிழாக்கள் உள்ளிட்ட இடங்களில் மக்களுக்காக வழங்கக்கூடிய உணவுகளை சுகாதாரத்துறை கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இருக்கும் கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து காணப்படும் பட்சத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வாய்ப்புள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பொருட்காட்சி இடங்கள், கலாச்சார நிகழ்வுகள், மதசார்பு நிகழ்வுகள் அதிகரித்து காணப்படும் நிலையில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிக்கான பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. சுகாதாரத்துறை கூறும் கட்டுப்பாடுகளை பின்பற்றினால் மட்டுமே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.