எந்த விதத்திலும் இது தடைபடக் கூடாது! மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்!

Photo of author

By Sakthi

தென் ஆப்ரிக்காவிலிருந்து பரவிய புதிய வகை நோய் தொற்று தமிழகம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுடெல்லி, ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட், கேரளா, என்று பல்வேறு மாநிலங்களிலும் பரவி இருக்கிறது.

ஒமிக்ரான் காரணமாக, மூன்றாவது அலை உண்டாகி விடுமோ என்ற அச்சம் உள்ளதால் நாடு முழுவதும் மறுபடியும் தேவையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அனைத்து மாநிலங்களுக்கும் ஏறத்தாழ 50,000 வெண்டிலேட்டர் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், மருத்துவ ஆக்சிசன் சாதனங்களின் தயார் நிலை தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று காணொலிக் காட்சியின் மூலமாக ஆய்வு செய்தார். அப்போது இந்த தொற்றை சமாளிப்பதற்கு மருத்துவ ஆக்ஸிஜன் முக்கியமான பொருள் இதன் தடையற்ற வினியோகம் மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதோடு மேலும் அவர் தெரிவித்ததாவது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கிய ஆக்சிஜன் உற்பத்தி சாதனங்களின் செயல்பாடு நிலவரத்தை நாள்தோறும் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் நாட்டில் தற்சமயம் 3236 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன் மொத்த உற்பத்தி திறன் 3723 மெட்ரிக் டன் இவைதவிர 1 லட்சத்து 14 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளும் பிரதமர் நலநிதி மூலமாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

நாடு முழுவதும் 1374 மருத்துவமனைகளில் 958 திரவ மருத்துவ ஆக்சிஜன் சேமிப்பு கிடங்குகள் மற்றும் பைப் லைன்கள் வசதிகள் ஏற்படுத்தி வைக்கவும், மத்திய அரசு நிதி கொடுத்திருக்கிறது. இந்த வாய்ப்பை மாநிலங்கள் பயன்படுத்தி ஆக்சிஜன் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.