தந்தையின் விவாகரத்தால் மனம் உடைந்து..மகன் அமீன் வெளியிட்ட பதிவு!!

Photo of author

By Jeevitha

Cinema News:  ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு விவாகரத்து செய்ய போவதாக கூறி வருகின்றனர். இதனால் மனம் உடைந்த அவரது இளைய மகன் எங்களுக்கு இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வர எங்களுக்கான தனிமை நேரத்தை கொடுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ர பானுவிற்கு திருமணம் ஆகி கிட்டத்தட்ட சுமார் 29 ஆண்டுகள் சிறப்பான திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். ஏ.ஆர்.ரகுமான் பல மேடைகளில் தங்களின் காதலை பற்றி அழகாக கூறியிருந்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளன.

இதில் மூத்த மகளுக்கு திருமணம் நடந்து முடிந்தது என கூறப்படுகிறது. இளைய மகன் ஏ.ஆர்.அமீன் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருக்கிறார். இவர் தற்போது தாய் தந்தை விவகாரத்தில் மனம் உடைந்து ஒரு முக்கிய செய்தியை வெளிப்படுத்தி உள்ளார். அந்த செய்தியில் “we kindly request everyone to respect our privacy during this time. Thank you for your understanding” என தெரிவித்துள்ளார்.

இந்த மோசமான சூழலில் தங்களுடைய குடும்பத்திற்கு தனிப்பட்ட நேரத்தை கொடுங்கள் என மிக தாழ்மையுடன் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் இருந்து மீண்டு வர எங்களுக்கு தனிமை வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே திரையுலகில் அதிர்ச்சியை தந்த ஜோடிகளின் விவாகரத்து பிரச்சனையில் இருந்து மீண்டு வந்த நிலையில் இந்த செய்தி ரசிகர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.