பரபரப்பான தமிழக அரசியல் களம்! மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்களுடன் அதிமுக இன்று அவசர ஆலோசனை!

Photo of author

By Sakthi

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இன்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகின்றது.

தமிழ்நாட்டில் 2021 ஆம் வருடம் சட்டப்பேரவை தேர்தல் வருகின்றது தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான, அதிமுக, மற்றும் திமுக, கட்சிகள் மிகத்தீவிரமாக தேர்தல் பணிகளில் இறங்கி இருக்கிறார்கள். இதன் காரணமாக அதிமுக, மற்றும் திமுக, கட்சிகள் தேர்தல் அறிக்கைகள் தயாரிப்பு குழுவை நியமித்திருக்கிறது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளைய தினம் சென்னை வர இருக்கிறார். அதிமுக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகின்றது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோரின் தலைமையில் அந்தக் கட்சியினர் ஆலோசனை மேற்கொள்கின்றன. சென்னையில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் 4:30 அளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கின்றது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கூட்டணி தொகுதிப் பங்கீடு போன்றவை சம்பந்தமாக அதிமுக ஆலோசனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அமைச்சர்கள், மற்றும் எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள். மண்டல பொறுப்பாளர்கள். ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள்.