ஜூன் 18, 19 தேதிகளில் 9 மாவட்டங்களுக்கு கனமழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!
ஜூன் 8 ஆம் தேதியில் தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியது. அதனை அடுத்து அரபி கடலில் உருவான பிபர்ஜாய் அதிதீவிர புயலாக உருவாகியது. இந்த புயல் வியாழக்கிழமை மாலை 6.30க்கு குஜராத்தில் கரையைக் கடந்தது.
இதனை அடுத்து தென் மேற்கு பருவமழை, பருவ காற்றாக மாறி தீவரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு. இந்த தகவலை சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ளார்.
மேலும் இன்றும் நாளையும் 14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும். ஜூன் 18, 19 தேதிகளில் வெப்ப சலனம் காரணமாக சில மாவட்டகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 18 ஆம் தேதி சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் , திருச்சி, மயிலாடுதுறை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஜூன் 19 ஆம் தேதி நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
கடலோர பகுதிகளில் 65 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனவும், இன்று முதல் 19 ஆம் தேதி வரை யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
நேற்று வானிலை நிலவரப்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 15 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.