தமிழகத்தில் இந்த 21 மாவட்டங்களில் பெய்யவிருக்கும் கனமழை!

0
148

தமிழகத்தில் பருவமழை தொடங்கியதிலிருந்து பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதோடு தமிழகத்தில் பெய்து வரும் இந்த மழையின் காரணமாக, தமிழகம் முழுவதும் இருக்கின்ற ஆறுகள், ஏரிகள், குளங்கள், உள்ளிட்டவற்றில் நீர் நிரம்பி வழிகின்றன.

அதேபோல காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. பல்வேறு அணைக்கட்டுகள் நிரம்பி வருகின்றன. திருச்சி முக்கொம்பு அணை கடல் போல் காட்சியளித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 21 மாவட்டங்களில் நாளைய தினம் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு நீலகிரி, கோவை, போன்ற மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சொல்லப்படுகிறது. மேலும் கோயமுத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர், தேனி, போன்ற 21 மாவட்டங்களில் நாளைய தினம் கனமழையும், பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. நேற்று காலை நிலவரத்தினடிப்படையில் பெரம்பலூர் மாவட்டம் இலுப்பை குடிக்காடு பகுதியில் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.