சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
205

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தெற்கு வங்ககடலில் நிறைவேறும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் நேற்று விடிய விடிய கனமழை பெய்தது இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் சென்னையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தற்சமயம் தீவிரமடைந்து வருகிறது கடந்த 24 மணி நேரத்தில் அதிக கனமழை 3 பகுதிகளிலும், காண முதல் மிக கனமழை 4 பகுதிகளிலும், 70 பகுதிகளில் கனமழை பெய்திருக்கிறது என கூறியிருக்கிறார்.

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழையும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நாளைய தினம் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை அண்டை மாவட்டங்கள் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, கரூர், திருச்சி, அரியலூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும், பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மிக காண மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே பெய்த மழை எதிர்வரும் நாட்களில் பதிவாக இருக்கின்ற மழை மற்றும் பாதிப்புகளை கருத்தில்கொண்டு கடலோர மாவட்டங்களுக்கு அடுத்து வரக்கூடிய இரண்டு நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், அதனை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

இதனடிப்படையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்,சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் டெல்டா மாவட்டங்கள் ராமநாதபுரம் புதுக்கோட்டை மதுரை கரூர் திருச்சி அரியலூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுநாள் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும், பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 30ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுநாள் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படும் இது அடுத்த இரண்டு நாட்களில் மேலும் இது வடமேற்கு திசையில் நகர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதனால் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக, 29ம் தேதி 30 உள்ளிட்ட தேதிகளில் அந்தமான் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

நேற்று காலை 8 .30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நிலவரப்படி அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 31 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் 27 செண்டி மீட்டரும், திருச்செந்தூரில் 25 சென்டி மீட்டரும், நாகப்பட்டினத்தில் 19 சென்டி மீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 18 சென்டி மீட்டரும். குலசேகரப்பட்டினத்தில் 16 செண்டிமீட்டரும் ,செய்யாறு பகுதியில் 15 சென்டிமீட்டர், காரைக்கால், திருவையாறு, சாத்தான்குளம் மற்றும் ஒட்டப்பிடாரம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் 12 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது.

அதேபோன்று திருபுவனம், ஸ்ரீமுஷ்ணம், சாத்தூர், பேராவூரணி, லப்பைகுடிகாடு, பாளையங்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் 11 சென்டி மீட்டர் மழையும், திண்டுக்கல், திருவாரூர், கூடலூர், அகரம்சிகூர் புதுக்கோட்டை, சிவகங்கை, உள்ளிட்ட பகுதிகளில் 10 சென்டி மீட்டர் மழையும், தாம்பரம், மணிமுத்தாறு நன்னிலம், கே வி குப்பம், செம்பரம்பாக்கம், கடம்பூர், மணியாச்சி சேரன்மாதேவி, உள்ளிட்ட பகுதிகளில் 1 சென்டி மீட்டர் மழையும், பதிவாகி இருக்கிறது இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Previous articleஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்! அரையிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்து!
Next articleஇதற்கு ஏன் அனுமதி வழங்கக்கூடாது? ஐகோர்ட் நீதிபதி கேள்வி!