இந்த இரு தேதிகளில் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை!

0
221

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்றும், நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் குமரி கடல் மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும். ஆகவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

அக்டோபர் மாதம் 8 மற்றும் 9ஆம் தேதி களில் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருச்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் 11 சென்டிமீட்டர் வரையில் கனமழை பெய்யும் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஷிகார் தவான் தலைமையில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா… இன்று முதல் ஒருநாள் போட்டி!
Next articleபதவி உயர்வை மறக்கும் கூட்டுறவு சங்க உதவி செயலாளர்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை