தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது பருவமழை தொடங்கியிருப்பதால் பரவலாக மழை பெய்து வருகிறது. அதோடு கர்நாடக மாநிலத்திலும் அதிகளவில் மழை பெய்து வருவதால் காவேரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.
அதோடு தமிழகத்தில் பல்வேறு அணைகளும் நிரம்பி கடல் போல காட்சி தருகின்றன, இதனால் அணைகளுக்கு வரும் நீர் அனைத்தும் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகின்றன.
இந்த நிலையில், 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழையும்,6 மாவட்டங்களில் கனமழையும், பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சில மாவட்டங்களில் கனமழையும், சில பகுதிகளில் மிதமான மழையும், தொடரும் என கூறப்பட்டுள்ளது.
இன்று காலை வரையிலான வானிலையில் கோயமுத்தூர், நீலகிரி, போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் மிக கனமழை பெய்யும் எனவும், அதேபோல கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, போன்ற மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என சொல்லப்படுகிறது0 இன்று பகல் முதல் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கே வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.