மக்களே உஷார்! இன்று கனமழை கொட்டித் தீர்க்கவிருக்கும் 10 மாவட்டங்கள்!

0
400

தென்மேற்கு பருவ மழை கேரள மாநிலத்தில் வலுவடைந்து வருகிறது இதன் காரணமாகவும், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழையும், சில பகுதிகளில் மிதமான மழையும், பெய்து வருகிறது.

அந்த விதத்தில் நேற்று நீலகிரி, கடலூர், கோவை, திண்டுக்கல், போன்ற பல மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதேபோல இன்றைய தினமும் வாய்ப்புள்ளது. மேலும் நாளையும், மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆகவே இன்று புதுவை தமிழகம் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல், போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழையும் பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரத்தின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Previous article+2 தேர்ச்சி பெற்ற மாணவர்களே இது உங்களுக்கான அறிவிப்பு தான்! உடனே முந்துங்கள்!
Next articleதனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ விபத்து!.. வெடித்து சிதறியதால் விரைந்து செயல்ப்பட்ட தீயணைப்பு வீரர்கள்!…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here