ஈரோடு மாவட்டத்தில் பெய்த கனமழை!!! வீட்டின் கூரை இடிந்து விழுந்து தாய் மற்றும் மகன்பலி!!!

Photo of author

By Sakthi

ஈரோடு மாவட்டத்தில் பெய்த கனமழை!!! வீட்டின் கூரை இடிந்து விழுந்து தாய் மற்றும் மகன்பலி!!!

ஈரோடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் கூரை இடிந்து விழுந்த விபத்தில் தாய் மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். அக்னி நட்சத்திரம் போல வெயில் பதிவாகி வந்தது. இதை அடுத்து ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வந்தது.

கயந்த மூன்று நாட்களாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் ஈரோடு மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து சிறிதளவு தப்பித்தனர். இந்நிலையில் நேற்று(செப்டம்பர் 1) இரவு ஈரோடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்து தாய் மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய அக்ரஹாரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. நேற்று(செப்டம்பர் 1) இரவு வீட்டில் சாரம்மா(தாய்) என்பவரும், முகமது அக்தர்(மகன்) என்பவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி தாய் சாரம்மா மற்றும் மகன் முகமது அக்தர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடந்த தாய் சாரம்மா, மகன் முகமது அக்தர் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.