பொங்கல் பண்டிகையின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவும் Helo ஆப்
உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இது இந்துக்கள் பண்டிகை என்று பார்க்காமல் பல்வேறு மதத்தினரும் வேறுபாடு மறந்து மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான காணும் பொங்கல் அன்று அந்தந்த பகுதிகளில் கடைபிடிக்கும் வழக்கதின் படி விளையாட்டு போட்டிகள், ஜல்லிக்கட்டு, எருதாட்டம் என பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் காணும் பொங்கல் அன்று சென்னை உள்ளிட்ட பல இடங்களில் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினருடன் அருகில் உள்ள கடற்கரை அல்லது ஆற்றங்கரை போன்ற சுற்றுலா தள பகுதிகளுக்கு சென்று கொண்டாடுவது வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பெருந்திரளாக கூட்டம் கூடுவதால் அது போன்ற இடங்களில் சிறுவர்கள்,முதியோர்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போவதும்,காணாமல் போன குழந்தைகளை கண்டு பிடிக்க காவல் துறையினர் கஷ்டபடுவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் இந்த வருடம் இது போன்ற இடங்களில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டறிய பிரபல சமூக வலைதளமான Helo செயலியும்,தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து தேடும் பொங்கல் என்ற பெயரில் ஒரு புதிய முயற்சியை தொடங்கியுள்ளனர்.
இதில் நாளை சென்னை மெரினா கடற்கரையில் கொண்டாட உள்ள காணும் பொங்கல் பண்டிகையின் போது உங்கள் அன்புக்குரிய சொந்தங்கள் யாராவது காணாமல் போனால் Helo கேர் அறிவித்துள்ள இந்த கேஷ் டேக்கை பயன்படுத்தி அவர்களின் படத்தை பகிர்ந்தால் அதை வைத்து சுலபமாக அவர்களை கண்டறிய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு சென்னை காவல்துறை மற்றும் Sixth Sense Foundation என்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் Helo கேர் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
[#தேடும் பொங்கல் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின் கடைசி தினமான காணும் பொங்கல் திருநாளன்று அனைவரும் குடும்பத்துடன் கடற்கரை உள்ளிட்ட பல சுற்றுலா தளங்களுக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது குழந்தைகள், முதியவர்கள் கூட்ட நெரிசல்களில் சிக்கி தொலைந்து போகின்றனர். இது போல தொலைந்து போகும் உங்கள் அன்புக்கு உரியவர்களை கண்டுபிடிக்க @Helo கேர் எடுத்துள்ள முன்னெடுப்பு தான் #தேடும் பொங்கல். அதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் தொலைந்து போகின்றவர்களை @Sixth Sense Foundation மற்றும் சென்னை காவல்துறை உதவியுடன் கண்டுபிடிக்க @Helo கேர் உதவு உள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் அங்குள்ள தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து இந்த பணியை மேற்கொள்கிறது Helo. கூட்ட நெரிசலில், உங்கள் அன்புக்கு உரியவர்கள் தொலைந்து போனால் அவர்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை #தேடும் பொங்கல் , #Helo கேர் என்னும் hashtag பயன்படுத்தி பதிவிடுங்கள். உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்!
தேடுவோம்! கண்டடைவோம்! கொண்டாடுவோம்!] http://m.helo-app.com/al/xscfpYdeT