#hema committee: பிரபல நடிகையை படுக்கைக்கு அழைத்த மம்முட்டி!! வெளியான பகீர் தகவல்!! 

Photo of author

By Sakthi

#hema committee: பிரபல நடிகை ஒருவரை நடிகர் மம்முட்டி அவர்கள் படுக்கைக்கு அழைத்ததாகவும் அந்த நடிகை மறுத்துவிட அவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை என்றும் தற்பொழுது மூத்த பத்திரிகையாளர் பரமேஸ்வரன் அவர்கள் தகவல் ஒன்றை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுது நாடே பேசி வரும் விஷயங்களில் முக்கியமான ஒன்று கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கை தான். கேரளாவின் அரசால் சினிமாவில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை வெளிப்படுத்தவும் அவர்களுக்கு தீர்வு வழங்கவும் ஹேமா கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பின்னர் தமிழ் சினிமாவிலும் அதன் எதிரொலிப்பு தொடங்கி இருக்கின்றது. கேரள சினிமாவில் எவ்வளவு தாக்கம் இருக்கின்றதோ அதே போல தமிழ் சினிமாவிலும் ஹேமா கமிட்டி அறிக்கை குறிப்பிடத்தக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹேமா கமிட்டி வெளியான பின்னர் பல நடிகர்களின் உண்மையான முகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. நடிகைகளும் தங்களுக்கு நடந்த பாலியல் ரீதியான பிரச்சனைகளை வெளியே சொல்ல தொடங்கியுள்ளனர். இந்த ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் கேட்டபோது அவர் அது பற்றி எதுவும் தெரியாது என்று கூறி நழுவிவிட்டார்.

அதே போல நடிகர் அர்ஜுன் அவர்களிடமும் ஹேமா கமிட்டி குறித்து கேட்ட பொழுது என்னை பற்றியும் என்னுடைய படங்களை பற்றி மட்டும் கேள்வி இருந்தால் கேளுங்கள் என்று கூறினார். அதே போல தேனியில் துணிக்கடை திறப்பு விழாவுக்கு வருகை தந்த நடிகர் ஜீவாவிடம் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேட்டபொழுது திடீரென்று சண்டைக்கு சென்ற நடிகர் ஜீவா பின்னர் தமிழ் சினிமாவில் இது போன்ற எந்தவொரு பாலியல் பிரச்சனைகளோ அட்ஜஸ்ட்மெண்ட் கேக்கும் பழக்கங்களோ இல்லை என்று கூறினார்.

என்னதான் நடிகர்கள் இவ்வாறு நல்லவர்களாக காட்டிக் கொண்டாலும் குஷ்பு, ஊர்வசி, ராதிகா போன்ற முன்னணி சீனியர் நடிகைகள் தமிழ் சினிமாவிலும் இது போன்ற பிரச்சனைகள் இருக்கின்றது என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து மூத்த பத்திரிகையாளர் பரமேஸ்வரன் அவர்கள் கூறும்பொழுது நடிகர் மம்முட்டி பற்றிய ஒரு தகவலை அவர் பகிர்ந்து கொண்டார்.

நடிகர் மம்முட்டி குறித்து மூத்த பத்திரிகையாளர் பரமேஸ்வரன் அவர்கள் “சுமார் 22 வருடங்களுக்கு முன்னர் நடிகர் மம்முட்டி அவர்கள் நடித்து வந்த ஒரு திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் அவர்களும் நடித்து வந்தார். ஒரு நாள் காலையில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் நடிகை மஞ்சு வாரியர் அவர்களிடம் மம்முட்டி அவர்களின் உதவியாளர் ஷூட்டிங் முடிந்த பின்னர் மாலை மம்முட்டி அவர்கள் அவர்களுடைய அறைக்கு வரச் சொன்னார்” என்று கூற அதற்கு நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் அப்பொழுதே தைரியமாக மம்முட்டி உதவியாளரிடம் “அந்த காதலனிடம் போய் சொல். நான் எல்லாம் அந்த கிழவனுடன் படுக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து மறுநாள் வழக்கம் போல நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார். மம்முட்டி அழைப்பிற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் மஞ்சு வாரியரை அதன் பின் ஒரு காட்சி கூட நடிக்க வைக்காமல் பழிவாங்கினார்” என்று கூறினார்.

மிகவும் கண்ணியமானவர் நடிகர் மம்முட்டி. இவர் மனைவி சொல்லே மந்திரம் என்று இருப்பவர் என நினைத்துக் கொண்டிருந்த மம்முட்டி ரசிகர்களுக்கு பத்திரிக்கையாளர் பரமேஸ்வரன் கூறிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.