காவல்துறையினரின் வாகனங்கள் உடைப்பு! மது பிரியர்களின் செல்ல சேட்டைகள்!

Photo of author

By Sakthi

சென்னையில் இருக்கின்ற ஐ.சி. எஸ் காலனி குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கோகுல் இவரை அந்த பகுதியைச் சார்ந்த ஒரு மது பிரியர் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையை சேர்ந்தவர்கள் கோகுலை தாக்கிய இளைஞர்களை கைது செய்ய முயற்சி செய்யவே அவருக்கு ஆதரவாக ஏற்கனவே மதுபோதையில் இருந்த ஒரு சிலர் விரைவாக வந்து காவல்துறையினரை முற்றுகையிட தொடங்கியிருக்கிறார்கள்.

அதோடு காவல்துறை அதிகாரிகளின் கார் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மாற்ற வாகனத்தையும் கற்கள் கொண்டு அடித்து நொறுக்கிய அந்த கும்பல் சில வாகனத்தை கீழே தள்ளிவிட்டு சென்றது. மதுபோதையில் எல்லாவற்றையும் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டது அந்த கும்பல்.

இதனைத்தொடர்ந்து குடியிருப்புவாசிகள் இடமிருந்து புகார்களை வாங்கிக்கொண்ட காவல்துறையினர் அம்பத்தூர் அருகே பதுங்கி இருந்த அந்த மதப்பிரியர் கும்பலை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.