ஹைய்யா ஜாலி இன்று முதல் பொதுமக்களுக்கு தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்ட அனுமதி! மகிழ்ச்சியில் மக்கள்!

Photo of author

By Sakthi

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கின்ற மிகப் பெரிய பிரபலமான சுற்றுலாத் தலமான வண்டலூர் உயிரியல் பூங்கா தமிழக வனத்துறையின் சார்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றது. வண்டலூர் பூங்காவில் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி மட்டும் 70 ஊழியர்களுக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதால் இந்த பூங்கா உடனடியாக மூடப்பட்டது.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட விஷ்ணு என்ற ஆண்சிங்கம் சிகிச்சை பலனின்றி பலியானது இதற்கு முன்பே நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நீலா மற்றும் பத்மநாபன் உள்ளிட்ட இரு சிங்கங்கள் மரணத்தை தழுவினர். பூங்கா ஊழியர்கள் மற்றும் வனவிலங்குக்கு நோய்தொற்று உறுதி செய்யப்படத்தையடுத்து பூங்கா முழுவதுமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில், வண்டலூர் பூங்கா நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, அதில் வண்டலூரில் இருக்கின்ற அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பிப்ரவரி மாதம் 3ம் தேதி ஆன இன்று முதல் அரசின் நோய்த்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்படுகிறது. பார்வையாளர்கள் அனைவரும் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான ஊரடங்கு உள்ளிட்டவற்றை தமிழக அரசு ரத்து செய்திருக்கிறது .இதனை அடுத்து மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.