ஸ்டெர்லைட் ஊழியர்கள் மீதான வழக்கு! அதிரடி உத்தரவை பிறப்பித்த மதுரை உயர் நீதிமன்றம்!

Photo of author

By Sakthi

ஸ்டெர்லைட் ஊழியர்கள் மீதான வழக்கு! அதிரடி உத்தரவை பிறப்பித்த மதுரை உயர் நீதிமன்றம்!

Sakthi

தமிழ்நாட்டில் நோய் தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி இருந்த சமயத்தில் மருத்துவமனைகளில் இருந்து வந்த ஆக்சிடெண்ட் பற்றாக்குறையைப் போக்குவதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து தமிழக அரசும் அனுமதி வழங்கியதை தொடர்ந்து கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த மே மாதம் 31-ஆம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி ஆரம்பமானது.

இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் தென்மாவட்டங்களின் இருக்கின்ற மருத்துவமனைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது. ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளுக்காக உச்சநீதிமன்றம் அளித்த அனுமதி காலம் கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்ததால், இந்த அனுமதியை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்து தூத்துக்குடி சிப்காட் மற்றும் புதியம்புதுர் பகுதியை சார்ந்த ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள், அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருந்தார்கள்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வந்தது இந்த சூழ்நிலையில், ஊழியர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவும், அந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், ஸ்டெர்லைட் துணைத் தலைவர் உட்பட பலர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.

நோய்த்தொற்று பரவக் கூடும் என்ற அச்சம் காரணமாக, பொதுமக்கள் உயிரிழப்பை தடுக்கும் நோக்கத்துடன் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிப்பு செய்ய தெரிவித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் ஊழியர்கள் மீது வழக்கு பதியப்பட்ட வழக்கு எல்லாம் ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டிருக்கிறார்.