உள் ஒதுக்கீடு விவகாரம்! தேசிய மருத்துவ ஆணையம் உயர்நீதிமன்றத்தில் பதில்!

0
188

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரண்டு இடங்களை அதிகரிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த வருடம் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்றது இதற்கிடையே மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கத்தை 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாத காரணத்தால், கடலூரைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, மற்றும் இலக்கியா, ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த மாணவிகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல் படுத்த தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு இருந்தார்கள்.

இந்த வழக்கானது, கடந்த 11ஆம் தேதி விசாரணைக்கு வந்த நேரத்தில், அரசு கல்லூரிகளில் கூடுதலாக இரண்டு மருத்துவ இடங்களை அதிகரிக்க இயலுமா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கானது, மறுபடியும் நேற்றைய தினம் விசாரணைக்கு இந்த நேரத்தில் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடம் உருவக் கூடாது, என்று முன்னரே உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதால், விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சார்பில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழ்நாட்டிலிருந்து அளிக்கப்பட்ட 227 இடங்கள் மறுபடியும் மாநில அரசுக்கே வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதோடு மனுதாரர் உட்பட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கிடைக்கும் 26 இடங்கள் கொண்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கின்றன. 60 அரசு பள்ளி மாணவர்களுக்கு மறுபடியும் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, அந்த அறுபது மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெளிவுபடுத்த உத்தரவிட்டு இந்த இந்த வழக்கை இன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம்.

Previous articleஅதிமுகவை எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்!
Next articleஅவர்கள் ஒன்றினைவதால் எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை! சீமான் அதிரடி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here