அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! திமுக பேச்சாளருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
284

பாஜகவை சார்ந்த நடிகைகளை ஆபாசமாக விமர்சனம் செய்தது. குறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய திமுகவின் பேச்சாளர் சைதை சாதிக்கிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் பாஜகவை சார்ந்த நடிகைகள் குஷ்பூ, கௌதமி, நமிதா உள்ளிட்டோரை திமுகவின் பேச்சாளர் சைதை சாதிக் ஆபாசமாக பேசியதாக காவல் துறையில் புகார் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று தெரிவித்து சாதிக் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, பெண்கள் தொடர்பாக இனி அப்படி பேச மாட்டேன் என்று நடிகைகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்.

இந்த வழக்கு வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அதுவரையில் சாதிக்கை கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

Previous articleபொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் சேர்த்து வழங்கப்படும்! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!
Next articleடிசம்பர் மாத தொடக்கத்தில் டெல்லி செல்கிறார் முதல்வர்! எதற்காக தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here