இவர்களுக்கே இந்த கதி என்றால் பொது மக்களின் நிலை என்ன? கொதித்த நீதிமன்றம்!

0
112

திருச்சி கரியமாணிக்கம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில் தாயனூர் கிராம உதவியாளர் பெரியசாமியை தாக்கி விட்டதாக என் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள். கிராம உதவியாளர் அவர்களுக்கும் , எனக்கும், இதற்கு முன்னரே கோவில் திருவிழாவின்போது பிரச்னை உண்டானது. அந்த முன்விரோதம் காரணமாக, என் மீது அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த வழக்கில் காவல்துறையினர் என்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார் சக்திவேல்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது அந்த சமயத்தில் கிராம உதவியாளரை தாயாகிய பின்னர் உப்பின் மீது முழங்காலில் நிற்க வைத்ததாக மனுதாரர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்படவில்லை என்ற காரணத்தால், முன்ஜாமின் கேட்டு வந்திருக்கிறார் என நீதிபதிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

காவல்துறையினர் சாதாரண மக்களுக்கான பாதுகாப்பை முதலில் உறுதி செய்வது அவசியம், அரசு ஊழியர்கள் பலர் தங்களுடைய வேலையை முறையாக மேற்கொள்வது இல்லை. அதோடு பலர் கையூட்டு வாங்குகிறார்கள். இந்த சூழ்நிலையில், நேர்மையாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு முறையாக பாதுகாப்பு வழங்குவது அவசியமான ஒன்றாகிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

நேர்மையான அதிகாரிகளுக்கு எதிரான செயல்கள் நடைபெறும் ஆனால் அதனை தடுக்காமல் விட்டுவிட்டால் அவர்கள் எவ்வாறு நேர்மையாக பணி புரிவார்கள்? நேர்மையான அதிகாரிகள் தங்கள் கடமையை செய்வதற்காகவே போராட வேண்டியிருக்கிறது என கருத்து தெரிவித்து இந்த வழக்கை அக்டோபர் மாதம் 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.

தற்போது அரசு ஊழியர்களில் நேர்மையான அதிகாரிகளை பார்ப்பதே மிகவும் கடினமாக உள்ளது. இப்படி ஆங்காங்கே இருக்கும் நேர்மையான அதிகாரிகள் காரணமாக தான் பொது மக்களுக்கு அவர்களுடைய தேவைகள் அனைத்தும் போய் சேருகிறது. அப்படியிருக்க அந்த நேர்மையான அதிகாரிகளுக்கு சரியான பாதுகாப்பு வழங்கவில்லை என்றால் பொது மக்களின் கதி என்ன? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சாதாரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு குறை தீர் மனுவை கையில் எடுத்துக் கொண்டு சென்றால் கூட அங்கே இருக்கக்கூடிய உதவியாளர்களுக்கு நூறு ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. இப்படி தமிழகம் லஞ்சத்தில் மிதந்து கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில், ஆங்காங்கே இப்படி நேர்மையான அதிகாரிகள் ஒரு சிலர் இருப்பதால் தான் சாதாரண ஏழை மக்கள் பயன் பெறுகிறார்கள். ஆகவே சாதாரண ஏழை மக்களை பாதுகாக்கும் வகையில் இது போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

Previous articleமுதல் ஆளாக பசுமை ஆட்டோவிற்கு மாறிய நபர்! 4 மணி நேரத்திற்கு 120 கிலோமீட்டர்கள்!
Next article10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 19,900 சம்பளத்தில் மத்திய அரசு வேலை, விண்ணப்பிக்க கடைசி நாள்