கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் புகுந்த உயர்ரக வாகனம்! குழந்தைகள் உட்பட பலர் படுகாயம்!
உலகம் முழுவதுமே வருகிற டிசம்பர் மாதம் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. அடுத்த மாதம் 25 ம் தேதி கொண்டாடப்பட உள்ள கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகள் எப்போதுமே நம் நாட்டை விட வெளிநாடுகளில் மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள். ஏனெனில் அங்கு பலரும் கிறித்தவர்கள் என்பதால் அதை சிறப்பிக்கும் வகையில் பலவித கொண்டாட்டங்கள் அரங்கேறும்.
அதற்கான ஏற்பாடுகள் தற்போதில் இருந்தே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரவாரங்களுடன் தொடங்கிவிட்டன. அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் வாகேஷா நகரில் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான சிறப்பு அணிவகுப்பு ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மேலும் ஆட்டம், பாட்டம் மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் இசைக்கருவிகளை இசைத்தபடி மாநகரின் முக்கிய சாலையின் வழியாக நூற்றுக்கணக்கான மக்கள் அணிவகுத்துச் செல்லும் சிறப்பு ஊர்வலம் ஒன்று தொடங்கியிருந்தது. அந்நேரத்தில் எங்கிருந்தோ வந்த எஸ்யூவி ரக கார் ஒன்று கூட்டத்தில் புகுந்தது.
அது ஒரு சிகப்பு நிற கார். அந்த வாகனம் சாலையிலேயே மிகவும் வேகமாக வந்தது. அது அந்த அணிவகுப்பில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது மிகவும் வேகமாக மோதியது. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 16:30 என்பதே தெரிவிக்கின்றனர். அந்த விபத்தில் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர்.
மேலும் 5 பேர் பலி என்றும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அந்த நபர் தான் விபத்தை ஏற்படுத்தினார் என்பது குறித்து போலீசார் எந்தவித தகவல்களும் இன்னும் வெளியிடவில்லை. அந்த விபத்தில் 11 பேர் பெரியவர்கள் என்றும், 12 பேர் குழந்தைகள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக திங்கட்கிழமை பள்ளிகள் எதுவும் திறக்கப்படாது என்றும், சாலைகள் அனைத்தும் மூடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பைடனுக்கும் சில தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
https://twitter.com/i/status/1462644483032453122